search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க கடற்படை"

    அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? என்பது குறித்த முழுமையான விவரத்தை கடற்படை வெளியிடவில்லை.
    வாஷிங்டன்:

    அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலை 5 நாட்களுக்கு பிறகே கடற்படை வெளியிட்டது. 

    விபத்தில் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்,  அமெரிக்க பிராந்தியமான குவாமை நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

    இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  தளபதி மற்றும் நிர்வாக அதிகாரிக்கு ஆலோசகராக பணியாற்றிய ஒரு மாலுமியும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? மற்றும் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரத்தை கடற்படை பகிரங்கமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய என்ஜினீயர் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய கோர்ட்டு, அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. #USNavy #LifeSentence #IndianEngineer
    நியூயார்க்:

    அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணம் ஒலாத்தே என்ற இடத்தில் உள்ள மது பாரில் இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா, அவரது நண்பர் அலாக் மதசானி ஆகிய 2 பேரையும் அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் சீனிவாஸ் குச்சிபோட்லா உயிரிழந்தார்.



    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி நடந்த இந்த இனவெறி தாக்குதல், அங்கு உள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்த தாக்குதலை நடத்திய அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஆதம் புரிண்டன் (வயது 53) உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர்மீது அங்கு உள்ள ஜான்சன் கவுண்டி மாவட்ட கோர்ட்டில் கொலை வழக்கு தாக்கலானது. இந்த வழக்கு விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டை ஆதம் புரிண்டன் ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய கோர்ட்டு, அவருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை அவர் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். 
    சிங்கப்பூர் நாட்டில் அமெரிக்க கடற்படை ஒப்பந்த நிபுணரான இந்திய வம்சாவளி பெண் ஊழலில் ஈடுபட்டதால் 3 ஆண்டுகள் சிறை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Singapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணான குர்ஷரன் கவுர் சரோன் ரசேல் என்பவர் அமெரிக்க கடற்படை ஒப்பந்தங்கள், கணக்குகளை நிர்வகிக்கும் நிபுணராக இருந்து வந்தார். அவர் பதவி வகித்த காலத்தில் தனியார் கப்பல் நிறுவனத்திடம் இருந்து சுமார் 65 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் குர்ஷரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி சஃபியுதீன் சருவான் அதிகாரத்தையும், நம்பிக்கையும் குர்ஷரன் தவறாக பயன்படுத்திவிட்டார் என கூறியுள்ளார். #Singapore
    ×